‘கோவிட்-19’ தடுப்பூசிகள்

COVID-19-ஐத் தோற்றுவிக்கும் வைரஸ்-இலிருந்து தடுப்பூசிகள் நம்மைப் பாதுகாக்கும். ஆஸ்திரேலியாவில் இருக்கும் 5 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஒவொருவரும் அவர்களுடைய இலவச COVID-19 தடுப்பூசியேற்றத்திற்கான முன் பதிவினைச் செய்துகொள்ளலாம்.

COVID-19 தடுப்பூசிகள்பற்றி

ஆஸ்திரேலியாவில் 5 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுள்ள அனைவரும், மற்றும் 6 மாதங்கள் முதல் 4 வயது வரை உள்ள சில குழந்தைகள், COVID-19 தடுப்பூசிக்குத் தகுதியுடையவர்கள்.

சிகிச்சையகம் ஒன்றைக் கண்டறிந்து முன்பதிவைச் செய்துகொள்ளுங்கள்

ஆஸ்திரேலியாவில் உள்ள அனைவருக்கும் COVID-19 தடுப்பூசிகள் இலவசம். ‘Medicare’ அட்டை இல்லாதவர்கள், வெளிநாடுகளிலிருந்து வந்திருப்பவர்கள், சர்வதேச மாணவ-மாணவியர்கள், புலம்-பெயர்த் தொழிலாளர்கள் மற்றும் அடைக்கலம் நாடிக்கொண்டிருப்பவர்கள் ஆகியோர் இதில் உள்ளடங்குவர்.

தடுப்பூசி இட்டுக்கொள்வதானது உங்களையும், உங்களுடைய குடும்பத்தினரையும், உங்களுடைய சமூகத்தினரையும் ‘COVID-19’-இல் இருந்து பாதுகாக்க உதவும்.

ஆஸ்திரேலிய அரசாங்கம் தடுப்பூசியைக் கட்டாயமாக்கவில்லை, மேலும் நீங்கள் COVID-19 க்கு எதிராகத் தடுப்பூசி போட வேண்டாம் என்று தேர்வு செய்யலாம்.

குறிப்பிட்ட சில சூழல்களில், சில மாநில மற்றும் எல்லைப்-பிரதேச பொது சுகாதார உத்தரவுகள் தடுப்பூசியேற்றத்தினைக் கட்டாயமானதாக்கலாம். உதாரணத்திற்கு, சில வகைப்பட்ட வேலைகளுக்கும், சில சமூக நடவடிக்கைகளுக்கும் இப்படிச் செய்யப்படலாம்.

தடுப்பூசிகள் பாதுகாப்பானவை

COVID-19 தடுப்பூசிகள் பாதுகாப்பானவை மற்றும் உயிர்களைக் காப்பாற்றும். ஆஸ்திரேலியாவில் Therapeutic Goods Administration (TGA) COVID-19 தடுப்பூசி பாதுகாப்பு மற்றும் பக்க விளைவுகளை உன்னிப்பாய்க் கண்காணித்துவருகிறது.

ஆஸ்திரேலியாவில் கிடைக்கும் ஒவ்வொரு தடுப்பூசியையும் பற்றி மேலும்தெரிந்துகொள்ளுங்கள்:

உங்களுடைய தடுப்பூசியை நீங்கள் இட்டுக்கொண்ட பிறகு உங்களுக்குக் கேள்விகளோ, கவலைகளோ இருந்தால், உங்களுடைய தடுப்புசியேற்ற சிகிச்சையகத்துடன், அல்லது உங்களுடைய மருத்துவருடன் தொடர்புகொள்ளுங்கள்.

யார் தடுப்பூசிகளை இட்டுக்கொள்ள வேண்டும்

5 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைவரும் COVID-19 க்கு எதிராகத் தடுப்பூசி போட வேண்டும்.

COVID-19 நோயால் மிகவும் நோய்வாய்ப்படுவதிலிருந்தோ அல்லது இறப்பிலிருந்தோ சிறந்த பாதுகாப்பைப் பெற, உங்கள் வயது மற்றும் உடல்நலத் தேவைகளுக்குப் பரிந்துரைக்கப்படும் அனைத்து மருந்துகளையும் நீங்கள் பெற்றிருக்க வேண்டும்.

6 மாதங்கள் முதல் 4 வயது வரை சில குழந்தைகள் COVID-19 தடுப்பூசியைப் பெறத் தகுதியுடையவர்கள்:

 • நோயெதிர்ப்புத்-திறன் தீவிரமாகப் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்களேயானால்
 • ஊனம், அல்லது
 • சிக்கலான மற்றும்/அல்லது பல சுகாதார நிலைமைகள் உடன் இருந்தாள் அவர்கள் கடுமையான COVID-19 ஆபத்தை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

6 மாதங்கள் முதல் 4 வயது வரையுள்ள குழந்தைகள் பெற வேண்டியது:

 • COVID-19 தடுப்பூசியின் இரண்டு முதன்மை ஊசிகள் பெற வேண்டும்
 • கடுமையான நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்களுக்கு மூன்றாவது முதன்மை பாட ஊசி தேவைப்படுகிறது.

5 முதல் 17 வயது வரை குழந்தைகள் பெற வேண்டியது:

 • COVID-19 தடுப்பூசியின் இரண்டு முதன்மை ஊசிகள் பெற வேண்டும்
 • கடுமையான நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்களுக்கு மூன்றாவது முதன்மை பாட ஊசி தேவைப்படுகிறது.
 • ஒரு booster dose ஊசி எப்பொழுது தேவைப்படுகிறது என்றால்:
  • அவர்கள் கடுமையாக நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்களாக இருந்தால்
  • அவர்களுக்கு ஏதேனும் இயலாமை இருந்தால்
  • அவர்களுக்குச் சிக்கலான மற்றும்/அல்லது பல சுகாதார நிலைகள் இருந்தால், அவை கடுமையான COVID-19 ஆபத்தை அதிகரிக்கின்றன
  • COVID-19 தொற்று அல்லது தடுப்பூசியின் கடைசி ஊசிகள்லிருந்து 6 மாதங்கள் அல்லது அதற்கும் மேலாக இருந்தால் வேண்டும்.

உங்கள் பிள்ளைக்கு ஊக்க ஊசி பெறவேண்டுமா என்பதை தீர்மானிக்க உங்கள் மருத்துவர் உங்களுக்கு உதவுவார்.

18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய ஒவ்வொருவரும் தடுப்பூசி இட்டுக்கொள்ள வேண்டும்:

 • COVID-19 தடுப்பூசியின் இரண்டு முதன்மை ஊசிகள் பெற வேண்டும்
 • கடுமையான நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்களுக்கு மூன்றாவது முதன்மை பாட ஊசி தேவைப்படுகிறது.

18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைவரும், கடைசி டோஸ் எடுத்து 6 மாதங்கள் ஆகிவிட்டாலோ அல்லது COVID-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டாலோ, பூஸ்டர் டோஸைக் கருத்தில் கொள்ளலாம்.

COVID-19 பூஸ்டர் தடுப்பூசி பற்றி மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

குழந்தைகள்

AusVaxSafety இன் COVID-19 தடுப்பூசி பாதுகாப்புத் தரவு, 5 முதல் 15 வயது வரையிலான குழந்தைகள், மருத்துவப் பரிசோதனைகளில் COVID-19 தடுப்பூசிக்குப் பின் வந்த நாட்களில் குறைவான பக்கவிளைவுகளைப் பதிவு செய்ததாகக் காட்டுகிறது.

COVID-19 தடுப்பூசிகள் குழந்தைகளில் எதிர்கால மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

குழந்தைகள் மற்றும் இளம் வயதினருக்கான COVID-19 தடுப்பூசிகள் பற்றி மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

கர்ப்பமாக இருக்கும், அல்லது தாய்ப்பாலூட்டிக்கொண்டிருக்கும் பெண்கள்

நீங்கள் கர்ப்பமாக இருந்தாலோ, தாய்ப்பால் கொடுத்தாலோ அல்லது கர்ப்பத்தைத் திட்டமிடுகிறாலோ COVID-19 தடுப்பூசிகள் பாதுகாப்பானவை. கர்ப்பத்தின் எந்தக் கட்டத்திலும் நீங்கள் தடுப்பூசி பெறலாம்.

கர்ப்பமாக இருக்கும், அல்லது தாய்ப்பாலூட்டிக்கொண்டிருக்கும் பெண்கள் மற்றும் COVID-19 தடுப்பூசிகள் பற்றி மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

இயலாமை உள்ளவர்கள்

குறைபாடுகள் உள்ளவர்கள் COVID-19 இலிருந்து கடுமையான நோய்க்கான அதிக ஆபத்தை எதிர்கொள்கின்றனர் மற்றும் அவர்கள் தடுப்பூசி போட வேண்டும்.

உங்களுக்கு மேலதிக உதவியோ, ஆதரவுதவியோ தேவைப்பட்டால் 1800 643 787-இல் Disability Gateway Helpline -ஐ அழையுங்கள். அவர்களால் உங்களுக்கான முன்பதிவு ஒன்றைச் செய்ய இயலும்.

உங்களுக்கு மொழிபெயர்ப்பாளர் தேவைப்பட்டால், மொழியாக்கம் மற்றும் வியாக்கியானம் செய்யும் சேவை 131 450ஐ அழைத்து, Disability Gateway Helpline -ஐ தொலைபேசியில் அழைக்கச் சொல்லுங்கள், அவர்களால் உங்களுக்கான முன்பதிவு ஒன்றைச் செய்ய இயலும்.

தற்சமய உடல் நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள்

தற்போதுள்ள உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள், COVID-19 இலிருந்து கடுமையான நோய்களுக்குகான அதிக ஆபத்தில் உள்ளனர் எனவேஅவர்கள் தடுப்பூசி போட வேண்டும்.

உங்கள் நிலைமைக்குச் சிறந்த தடுப்பூசிபற்றி உங்கள் வழக்கமான சுகாதார வழங்குநரிடம் பேசுங்கள்.

தடுப்பூசிகளை எங்கு இட்டுக்கொள்ளலாம்

பின் வரும் இடங்களில் ‘COVID-19’ தடுப்பூசி ஒன்றை நீங்கள் பெறலாம்:

 • Commonwealth vaccination clinics (பொதுநல அரசாங்கத் தடுப்பூசியளிப்பு மையங்கள்)
 • தடுப்பூசியளிப்புத் திட்டத்தில் பங்குபற்றும் பொது-மருத்துவ நிலையங்கள்
 • Aboriginal Controlled Community Health Services (ஆபொரிஜினிப் பூர்வகுடிக் கட்டுப்பாட்டு சமூக சுகாதார சேவைகள்)
 • மாநில மற்றும் எல்லைப்பகுதி தடுப்பூசியளிப்பு சிகிச்சையகங்கள், மற்றும்
 • தடுப்பூசியளிப்புத் திட்டத்தில் பங்குபற்றும் மருந்துக்கடைகள்.

பொது மருத்துவர்களால் தடுப்பூசிக்காக உங்களிடமிருந்து கட்டணம் வசூலிக்க இயலாது.

உங்களுக்கு மிக அண்மையில் உள்ள தடுப்பூசியிடும் சிstill operationalச்சையகத்தைக் கண்டறியவும், சந்திப்புவேளை ஒன்றை ஏற்படுத்திக்கொள்ளவும் Vaccine Clinic Finder-ஐப் பயன்படுத்துங்கள்.

உங்களுக்கு மொழிபெயர்ப்பாளர் தேவைப்பட்டால், 131 450-இல் ‘Translating and Interpreting Service’யினை அழைத்து மற்றும் அவர்களிட ம் Disability Gateway Helpline -ஐ இணைக்க சொல்லுங்கள்.

Easy vaccine Access, என்றும் அழைக்கப்படும் EVA, உங்கள் மொழியில் தொலைபேசியில் COVID-19 தடுப்பூசி முன்பதிவு செய்ய உதவும் ஒரு சேவையாகும். EVA வாரத்தில் 7 நாட்கள் காலை 7 மணி முதல் இரவு 10 மணிவரை (AEST) இயங்குகிறது. EVA பற்றி மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

உங்களுக்கு ‘Medicare’ அட்டை இல்லை என்றால்

உங்களிடம் Medicare அட்டை இல்லையென்றால், சமூக மருந்தகங்கள் மற்றும் மாநில அல்லது பிராந்திய தடுப்பூசி கிளினிக்குகள் நீங்கள் இலவச தடுப்பூசியைப் பெறலாம்(அவை இன்னும் செயல்படுகிறது).

உங்கள் COVID-19 தடுப்பூசிக்கு முன்

ஏற்கனவே நீங்கள் இப்படிச் செய்திருக்கவில்லை என்றால், சந்திப்புவேளை ஒன்றிற்கான முன்பதிவினைச் செய்துகொள்ளுங்கள்.

சிகிச்சையகம் ஒன்றைக் கண்டறிந்து முன்பதிவைச் செய்துகொள்ளுங்கள்

உங்களிடம் Medicare அட்டை இருந்தால், உங்கள் விவரங்கள் புதுப்பித்த நிலையில் உள்ளதா என்பதைச் சரிபார்க்கவும்:

உங்களுடைய சந்திப்புவேளைக்கு முன்பாகவோ, இன்னொருவர் சார்பாகத் தடுப்பூசியிடுவதற்கான முடிவினை நீங்கள் மேற்கொள்கிறீர்கள் என்றாலோ, சம்மதப் படிவம் ஒன்றைப் பூர்த்தி செயுமாறு நீங்கள் கேட்கப்படலாம்.

ஒப்புதல் படிவத்தினை வாசியுங்கள்.

5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கான தகவல் மற்றும் ஒப்புதல் படிவத்தைப் படிவத்தினை படிக்கவும்.

உங்கள் COVID-19 தடுப்பூசி போயட்டப் பிறகு

அரிதான ஒவ்வாமை எதிர்வினை ஒன்று ஏற்படக்கூடும் என்பதற்காக, உங்களுக்குத் தடுப்பூசி இடப்பட்ட பிறகு குறைந்தபட்சமாக 15 நிமிடங்களுக்கு நீங்கள் கண்காணிக்கப்படுவீர்கள். உங்களுக்குத் தடுப்பூசி போடும் நபர் உடனடி எதிர்வினைகளுக்குப் பதிலளிக்க பயிற்சி பெற்றுள்ளார்.

பெரும்பாலான COVID-19 தடுப்பூசிகளின் பக்க விளைவுகள் லேசானவை மற்றும் 1 முதல் 2 நாட்களில் மறைந்துவிடும். பொதுவான பக்க விளைவுகளில் உள்ளடங்குவன:

 • புஜத்தில் ஊசி இறங்கிய இடத்தில் வலி
 • களைப்பு
 • தலைவலி
 • தசை வலி
 • காய்ச்சல் மற்றும் குளிர்க்-காய்ச்சல்கள்.

எந்த மருந்து அல்லது தடுப்பூசியைப் போலவே, அரிதான அல்லது அறியப்படாத பக்க விளைவுகள் இருக்கலாம். பாரதூரமான பக்க விளைவிகள் உங்களுக்கு ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன என்று நீங்கள் நினைத்தால், உங்களுடைய சுகாதாரப் பராமரிப்புத் தொழிலருடன், அல்லது National Coronavirus Helpline உடன் தொடர்புகொள்ளுங்கள்.

1800 020 080

மொழிபெயர்த்துரைப்பாளர் ஒருவர் உங்களுக்குத் தேவைப்பட்டால், National Coronavirus Helpline -ஐ அழைத்து ‘option 8’-ஐ மேற்கொள்ளுங்கள்.

தடுப்பூசியேற்றியச் சான்று

உங்கள் COVID-19 தடுப்பூசிக்கான ஆதாரத்தைப் பெற, நீங்கள் உங்களின் நோய்த்தடுப்பு வரலாற்றுக் கூற்’றினை அணுகவும்.

உங்களுடைய ‘தடுப்பு-மருந்து வரலாற்றுக் கூற்’றினை நீங்கள்பின் வரும் வழிகளில் பெறலாம்:

 • இணையம் மூலமாக, உங்களுக்கான myGov account ஒன்றை ஏற்படுத்திக்கொண்டு, உங்களுடைய ‘Medicare online account’ இணைய-வழிக் கணக்கிற்குச் செல்வதன் மூலம்
 • Express Plus Medicare mobile app எனும் செயலியின் மூலம் பெறலாம்.

உங்களுக்கு ‘Medicare’ அட்டை ஒன்று இல்லை என்றால், அல்லது myGov கணக்கு வசதி இல்லை என்றால், பின்வரும் வழிகளில் நீங்கள் உங்களுடைய ‘தடுப்பு-மருந்து வரலாற்றுக் கூற்’றினைப் பெறலாம்:

 • பிரதி ஒன்றை உங்களுக்காக அச்சிட்டுத் தருமாறு உங்களுடைய தடுப்பூசி மருந்து வழங்குநரை நீங்கள் கேட்கலாம், அல்லது
 • 1800 653 809 இல் (காலை 8 - திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 5 மணிவரை) ஆஸ்திரேலிய நோய்த்தடுப்புப் பதிவேடு விசாரணை தொலைபேசியில் அழைத்து, உங்கள் அறிக்கையை உங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பும்படி கேட்கலாம். இது தபால் மூலமாக உங்களுக்கு வந்து சேர 14 நாட்கள்வரை ஆகலாம்.

உங்களுடைய ‘COVID-19’ தடுப்பூசியேற்றல் சான்றினைப் பெறுவதைப் பற்றிய மேலதிகத் தகவல்களுக்கு சேவைகள் ஆஸ்திரேலியா இணையதளம் (Services Australia website) எனும் வலைத்தலத்தினைப் பாருங்கள்.

நம்பிக்கைக்குரிய தகவல்களை எங்கிருந்து பெறுவது

நம்பகமான மற்றும் அதிகாரப்பூர்வ ஆதாரங்கள்மூலம் COVID-19 மற்றும் COVID-19 தடுப்பூசி திட்டத்தைப் பற்றித் தொடர்ந்து அறிந்திருப்பது முக்கியம்.

‘COVID-19’ தடுப்பூசிகளைப் பற்றிய பொதுவான கேள்விகளுக்கான பதில்கள் 63 மொழிகளில் கிடைக்கின்றன.

COVID-19 தடுப்பூசிகள்பற்றிய மொழி ஆதாரங்களைக் கொண்ட தகவல் தொகுப்பு உள்ளது.

COVID-19 -ஐப் பற்றி உங்கள் மொழியில் COVID-19 வலைத்தலத்தினை உங்கள் மொழியில் உள்ள தகவல்களை வாசியுங்கள்.

ஆதாரம்

மேலும் மொழிபெயர்க்கப்பட்ட COVID-19 தடுப்பூசி தகவலைப் பார்க்கவும்.

Last updated:

Help us improve health.gov.au

If you would like a response please use the enquiries form instead.