The government is now operating in accordance with the Guidance on Caretaker Conventions, pending the outcome of the 2025 federal election.

COVID-19 இலிருந்து உங்களையும் மற்றவர்களையும் பாதுகாத்தல்

நீங்களும் உங்களைச் சுற்றியுள்ளவர்களும் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்த நீங்கள் எடுக்கக்கூடிய படிகள் உள்ளன.

தடுப்பூசி போடுங்கள்

COVID-19 தடுப்பூசிகள், COVID-19 இலிருந்து கடுமையான நோய்களுக்கு எதிராக பாதுகாப்பை அதிகரிக்கும். ஆஸ்திரேலிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் (ATAGI) ஆலோசனையைப் பின்பற்றுகிறோம், யார் தடுப்பூசி போட வேண்டும் என்பது குறித்த பரிந்துரைகளை செய்கிறோம்.

உங்களின் தடுப்பூசிகள் குறித்து புதுப்பித்த நிலையில் இருப்பது சிறந்த பாதுகாப்பை வழங்குகிறது.

தடுப்பூசி சந்திப்பை முன்பதிவு செய்யவும்

தேவைப்படும் இடங்களில் முக கவசங்களை அணியுங்கள்

முக கவசம் அணிவது உங்களையும் உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் பாதுகாக்க உதவும்.

முக கவசங்கள் நோய்க்கிருமிகள் காற்றில் பரவுவதைத் தடுக்கின்றன. இதன் பொருள் நீங்கள் நோய்க்கிருமியைப் பிடிக்கவோ அல்லது பரவவோ வாய்ப்பு குறைவு.

நீங்கள் எப்போது முககவசம் அணிய வேண்டும் என்பதற்கு மாநிலங்கள் மற்றும் பிரதேசங்கள் வெவ்வேறு விதிகளைக் கொண்டுள்ளன. சமீபத்திய ஆலோசனைகளுக்கு உங்கள் உள்ளூர் சுகாதாரத் துறையின் இணையதளத்தைப் பார்க்கவும்.

முககவசத்தை அணிவது நல்லது:

  • பொது போக்குவரத்து, சுகதர மையங்கள் மற்றும் மருத்துவமனைகள் உட்பட உட்புற பொது இடங்களில்
  • நீங்கள் மற்றவர்களிடமிருந்து உடல் ரீதியாக விலகி இருக்க முடியாது
  • நீங்கள் நேர்மறை சோதனை செய்துள்ளீர்கள் அல்லது உங்களுக்கு COVID-19 இருப்பதாக நினைக்கிறீர்கள், மேலும் மற்றவர்களைச் சுற்றி இருக்கிறீர்கள்.

முககவசத்தை சரியாகப் பயன்படுத்த, நீங்கள் கண்டிப்பாக:

  • உங்கள் கைகளை அணிவதற்கு அல்லது கழற்றுவதற்கு முன் கழுவவும் அல்லது சுத்தப்படுத்தவும்
  • அது உங்கள் மூக்கு மற்றும் வாயை மூடி, உங்கள் கன்னத்தின் கீழ் இறுக்கமாக பொருந்துகிறது என்பதை உறுதிப்படுத்தவும்
  • உங்கள் முககவசத்தை அணியும்போதோ அல்லது அகற்றும்போதோ அதன் முன்பக்கத்தைத் தொடுவதைத் தவிர்க்கவும்
  • அதை இடத்தில் வைக்கவும் - அதை உங்கள் கழுத்தில் அல்லது உங்கள் மூக்கின் கீழ் தொங்கவிடாதீர்கள்
  • ஒவ்வொரு முறையும் ஒரு புதிய ஒற்றை பயன்பாட்டு முககவசத்தைப் பயன்படுத்தவும்
  • பயன்பாட்டிற்குப் பிறகு மீண்டும் பயன்படுத்தக்கூடிய முககவசங்களைக் கழுவி உலர்த்தி சுத்தமான உலர்ந்த இடத்தில் சேமிக்கவும்.
Date last updated:

Help us improve health.gov.au

If you would like a response please use the enquiries form instead.