Downloads
கோவிட்-19 தொற்று கண்டபின் அதனால் கடுமையாக பாதிக்கப்படும் அதிக ஆபத்தில் உள்ளவர்களுக்கான சிகிச்சைக்காக, வாய்வழி உட்கொள்ளும் புதிய மருந்துகள் கிடைக்கின்றன. நீங்கள் இவற்றை வீட்டில்வைத்தே உட்கொள்ளலாம்.
இவை வயதான பலருக்கும், நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு கொண்ட பெரியவர்களுக்கும் மற்றும் பூர்வீக குடி பின்னணிகொண்ட பெரியவர்களுக்கும் கிடைக்கின்றன.
இவற்றைப் பெற்றுக்கொள்ள மருத்துவர் வழங்கும் மருந்துச் சீட்டு உங்களுக்கு தேவைப்படும்.
உங்களுக்கு கோவிட்-19 வரும் வரை காத்திருக்க வேண்டாம். முன்கூட்டியே தயாராக இருக்கும்வகையில், இம்மருந்து குறித்து இப்போதே உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள்.
மேலதிக தகவலுக்கும், இவற்றைப் பெற்றுக்கொள்ள நீங்கள் தகுதியானவரா என்பதை அறிந்துகொள்ளவும் Australia.gov.au க்கு செல்லுங்கள். அல்லது 1800 020 080-ஐ அழையுங்கள். மொழிபெயர்த்துரைப்பு உதவியைப்பெற இலக்கம் 8-ஐ அழுத்துங்கள்.
Canberra-விலுள்ள ஆஸ்திரேலிய அரசால் அங்கீகரிக்கப்பட்டது.