COVID-19 ஊக்க ஊசி குறித்த அறிவுரை

COVID-19 ஊக்க ஊசிகளைப் பற்றியும், அவை யாருக்காக சிபாரிசு செய்யப்படுகின்றன என்பதைப் பற்றியும், ஊக்க ஊசி ஒன்று உங்களுக்கு எப்போது தேவைப்படும் மற்றும் அதை எப்படிப் பெறுவது என்பதைப் பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள்.

COVID-19 காரணமாகத் தீவிர நோய்வாய்ப்படல் அல்லது மரணித்தல் ஆகியவற்றிற்கு எதிரான மிகச் சிறந்த பாதுகாப்பினைப் பெற, உங்களுடைய வயது அல்லது தனிப்பட்ட சுகாதாரத் தேவைகளுக்கேற்ப சிபாரிசு செய்யப்படும் அனைத்து மருந்தளவுகளையும் நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். இந்தப் பாதுகாப்பினைப் பராமரித்துவர ஊக்க ஊசிகள் முக்கியம்.

ஊக்க மருந்தளவுகள் ஒவ்வொருவருக்கும் இலவசம்.

ஊக்க ஊசி மருந்தளவுகளைப் பற்றிய தகவல் உங்கள் மொழியிலும் கிடைக்கும்.

ஊக்க ஊசிகள்

அவர்களுடைய கடைசி COVID-19 மருந்தளவினை பெற்றுக்கொண்டதிலிருந்து, அல்லது உறுதிப்படுத்தப்பட்ட நோய்த்தொற்று ஏற்பட்டதிலிருந்து (எது மிகச் சமீபத்தியதோ அதை எடுத்துக்கொள்க) 6 மாதங்களோ, அதற்கு அதிகமான காலமோ ஆகியிருந்தால், COVID-19 காரணமாக ஏற்படும் தீவிர நோய்க்கு எதிராகக் கூடுதல் பாதுகாப்பினைப் பெறுவதற்காக அனைத்து வயதுவந்தவர்களும் ஊக்க ஊசி ஒன்றை பெற்றுக்கொள்ளலாம்.

பின் வருவோர் உள்ளடங்க, குறிப்பாகத் தீவிர நோயுறும் ஆபத்திலுள்ளவர்களுக்கு இது சிபாரிசு செய்யப்படுகிறது.

  • 65 ஆண்டுகள் வயதிற்கு மேற்பட்ட ஒவ்வொருவரும்
  • ஒரே சமயத்தில் காணப்படும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நோய்நிலைகள் உள்ளவர்கள், இயலாமை அல்லது சிக்கலான உடல்நலத் தேவைகளுள்ள 18 வயதிற்கு மேற்பட்ட ஒவ்வொருவரும்.

5 முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் ஒரு ஊக்க ஊசியைப் பெறலாம்:

  • அவர்கள் உடல் நிலை அவர்களைகடுமையான நோய் அபாயத்தில் வைக்கும் நிலை உள்ளது, மற்றும்
  • அவர்களின் கடைசி ஊசி அல்லது COVID-19 தொற்று ஏற்பட்டு 6 மாதங்கள் ஆகிவிட்டால்.

உங்கள் பிள்ளைக்கு ஊக்க ஊசி கிடைக்குமா என்பதை தீர்மானிக்க உங்கள் மருத்துவர் உங்களுக்கு உதவலாம்.

கடுமையான COVID-19க்கான ஆபத்துக் காரணிகள் எதுவும் இல்லாத 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கு இந்த நேரத்தில் ஊக்க ஊசிகள் பரிந்துரைக்கப்படுவதில்லை.

அனைத்துத் தடுப்பூசிகளும் ஆஸ்திரேலியவில் பயன்படுத்தப்படுவதற்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளன, அத்துடன் COVID-19 காரணமாக ஏற்படும் தீவிர நோய்க்கு எதிரான பாதுகாப்பினை அவை தொடர்ந்து அளித்துவருகின்றன, இருப்பினும், ‘ஓமிக்ரோன்’-ஐக் குறியாகக் கொண்ட ‘இரு-கலவைத் தடுப்பூசிகள்’ (‘பை-வேலண்ட்’ தடுப்பூசிகள்)) ஊக்க ஊசிகளுக்காகத் தெரிவு செய்யப்படுகின்றன.

உங்களுடைய கடைசி COVID-19 தடுப்பூசியை நீங்கள் போட்டுக்கொண்ட தேதி உங்களுடைய COVID-19 மின்னணுச் சான்றில் காணப்படும்.

சிகிச்சையகம் ஒன்றைக் கண்டறிந்து முன்பதிவைச் செய்துகொள்ளுங்கள்

ஊக்க ஊசிகளுக்கான முன்பதிவைச் செய்யும் விதம்

ஊக்க ஊசியை முன்பதிவு செய்ய, ஹெல்த் சர்வீஸ் ஃபைண்டரைப் பயன்படுத்தவும் அல்லது ‘ஹே ஈவா (Hey Eva)’ - ஈசி வெக்சின் அக்சஸ் பயன்படுத்தவும்.

ஈவா (EVA), என்பது COVID-19 தடுப்பூசிக்கான முன்பதிவைச் செய்வதில் மக்களுக்கு உதவுவதற்கான எளியதொரு மீள்-அழைப்பு சேவையாகும்.

COVID-19 தடுப்பூசி முன்பதிவைச் செய்வதில் உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் 0481 611 382 எனும் இலக்கத்திற்கு ‘ஹை ஈவா (Hey Eva)’ எனும் குறுஞ்செய்தியை அனுப்புங்கள். உங்களுடைய COVID-19 தடுப்பூசியேற்றத்திற்கான முன்பதிவைச் செய்வதில் உதவுவதற்காகத் தேசிய கொரோனா வைரஸ் ஹெல்ப்லைன்-இல் இருந்து பயிற்சி பெற்ற தொலைபேசி அழைப்புச் சேவகர் ஒருவர் உங்களை அழைப்பார்.

முதியோர் இல்லப் பராமரிப்பிற்கான ஊக்க ஊசித் திட்டம்

முதியோர் இல்லப் பராமரிப்பு வசதிகளில் ஊக்க ஊசித் திட்டம் செயல்பட்டுவருகிறது. முதியோர் இல்லங்களில் செயல்பட்டுவரும் COVID-19 ஊக்கத் தடுப்பூசியேற்றத் திட்டம்குறித்து மேலும் படியுங்கள்.

இயலாமை உள்ளவர்களுக்கான ஊக்க ஊசித் திட்டம்

மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளப்படும் தங்குமிட வசதிகளில் வசிக்கும் இயலாமை உள்ளவர்களுக்கான ஊக்க ஊசித் திட்டம் ஒன்று அளிக்கப்பட்டுவருகிறது. பகிரப்பட்ட குடியிருப்புகளில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான COVID-19 ஊக்க ஊசி திட்டத்தைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்.

COVID-19 ஊக்க ஊசிகளின் பாதுகாப்பு

ஊக்க ஊசிக்குப் பிறகு ஏற்படும் பொதுவான, லேசான பக்க விளைவுகள் முதல் 2 ஊசிகளுக்குப் பின் ஏற்படும் பக்க விளைவுகளைப் போலவே இருக்கும்.

COVID-19 தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் பக்க விளைவுகளைப் பற்றிய தகவல்களைப் பாருங்கள்.

Last updated:

Help us improve health.gov.au

If you would like a response please use the enquiries form instead.