கொரோனாவைரஸ் (கோவிட்-19)

‘கொரோனாவைரஸ் (கோவிட்-19)-ஐப் பற்றியும், உங்களையும், உங்கள் குடும்பத்தையும் சமூகத்தையும் பாதுகாத்துக்கொள்ள நீங்கள் மேற்கொள்ளவேண்டிய முக்கிய நடவடிக்கைகள் குறித்தும், உங்களுக்கோ, உங்கள் குடும்பத்தில் ஒருவருக்கோ தொற்று ஏற்பட்டால் நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.

COVID-19 பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

COVID-19 நோயானது, கொரோனாவைரஸ் SARS-CoV-2 வைரஸ்-இனால் ஏற்படுத்தப்படுகிறது. சிலரில் இது மிதமான சுகவீனத்தை ஏற்படுத்துகிறது, ஆனால் மற்றவர்களில் தீவிரமான நோயையும், மரணத்தையும் இதனால் ஏற்படுத்த இயலும்.

COVID-19 நோய்க்கான அறிகுறிகள்

COVID-19 நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் லேசான அறிகுறிகளை மட்டுமே அனுபவிக்கின்றனர். நீங்கள் வழமையாக உட்கொள்ளும் வலி நிவாரண மருந்துகளைக் கொண்டு இவற்றைக் கட்டுப்படுத்த இயலும்.

உங்களுக்கு நோயறிகுறிகள் ஏதும் இருக்கின்றனவா என்று அவதானியுங்கள்

பொதுவான நோயறிகுறிகள் அதி-பொதுவாகக் காணப்படாத நோயறிகுறிகள் தீவிர நோயறிகுறிகள்

காய்ச்சல் அல்லது உயர்ந்த உடல் உஷ்ண நிலை

தலைவலி

சுவாசிப்பதில் சிரமம்

மிகவும் களைப்பான உணர்வு தொண்டை வலி நீலம் பாய்ந்த உதடுகள் அல்லது முகம்
இருமல் – சில வேளைகளில் கபத்துடன் (சளியுடன்) கூடியது மிதமான மூச்சுத் திணறல் நெஞ்சில் வலி அல்லது அழுத்தம்
சுவை மற்றும்/அல்லது வாசனைத் திறன் இழப்பு தசை அல்லது மூட்டு வலிகள் குளிர்ந்த, ஈரமான, அல்லது வெளிரிய மற்றும் புள்ளிகள் படிந்த தோல்
கசியும் நாசி மயக்கம் அல்லது நிலை தடுமாறி விழல்
குளிர்க்காய்ச்சல்கள் குழம்பிய நிலை
குமட்டல்/வாந்தி எழுவது சிரமமாக ஆகிக்கொண்டிருத்தல்
வயிற்றுப்போக்கு மிகக் குறைந்த அல்லது அறவே இல்லாத சிறுநீர்ப் போக்கு

மேலே சொல்லப்பட்டுள்ள தீவிரமான நோயறிகுறிகளில் உங்களுக்கு எதுவும் இருந்தால், உடனடியாக 000 (மூன்று பூஜ்யம்)-ஐ அழையுங்கள். கடுமையான அறிகுறிகளுடன் உங்களுக்கு COVID-19 இருப்பதாகவும், உங்களுக்கு அவசரமருத்துவ ஊர்தி அனுப்பப்பட வேண்டும் என்றும் தொலைபேசி ஆபரேட்டரிடம் சொல்லுங்கள்.

000 (மூன்று பூஜ்யம்)-ஐ அழையுங்கள்.

நீங்கள் ஆங்கிலம் பேசாதவர் என்றால், ‘ambulance’ வேண்டும் என்று கேளுங்கள், மற்றும் மொழிபெயர்த்துரைப்பாளர் ஒருவர் வேண்டுமெனக் கேட்பதற்காக இணைப்பில் காத்திருங்கள்.

நீங்கள் பரிசோதனை செய்து 6 வாரங்களுக்கு மேலாகியும் COVID-19 இன் அறிகுறிகள் இருந்தால், உங்கள் உடல்நலப் பாதுகாப்பு வழங்குநரிடம் பேசுங்கள்.

உங்களையும் மற்றவர்களையும் பாதுகாத்துக்கொள்வது எப்படி

COVID-19 இன் நோய் பரவலைக் குறைப்பதில் அனைவரும் பங்கு வகிக்கலாம். மற்றவர்களையும் உங்களையும் பாதுகாக்க, நீங்கள் செய்ய வேண்டியது:

  • உங்களுக்கு உடல்நிலை சரி இல்லாமல் இருந்தால் வீட்டில் இருங்கள்
  • நல்ல சுகாதாரத்தை கடைபிடிக்கவும்
  • மற்றவர்களிடமிருந்து 1.5 மீட்டர் தூர இடைவெளி விட்டு விலகியிருந்து உடல்ரீதி விலகலைப் பின்பற்ற வேண்டும்
  • முகக் கவசம் ஒன்றை அணிய வேண்டும்
  • பரிசோதனை செய்து கொள்ளுங்கள், உங்களுக்கு நேர்மறையாக இருந்தால், வீட்டிலேயே இருக்க பரிந்துரைக்கப்படுகிறது.

COVID-19 இலிருந்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும், உங்கள் சமூகத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்கான சிறந்த வழி தடுப்பூசி போடுவது.

இன்னும் அதிகமான ஆபத்தில் இருப்பவர்கள்

COVID-19 தொற்று ஏற்பட்டால் சிலர் மிகவும் நோய்வாய்ப்படலாம். இன்னும் அதிகமான ஆபத்தில் இருப்பவர்களில் பின் வருவோர் உள்ளடங்கக்கூடும்:

  • அதிகம் வயதானவர்கள்
  • ஏற்கனவே உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள்
  • Aboriginal பூர்வகுடி மக்கள் மற்றும் Torres Strait Islander எனப்படும் ‘டோரிஸ் நீரிணைத் தீவக’ மக்கள்
  • இயலாமை உள்ளவர்கள்.

நோயறிவுச் சோதனையை மேற்கொள்ளல்

உங்களுக்கு ஏதேனும் COVID-19 அறிகுறிகள் இருந்தால், லேசானதாக இருந்தாலும் கூட, கூடிய விரைவில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

உங்களுக்கு COVID-19 இருக்கிறதா என்பதைக் காட்ட 2 வகையான சோதனைகள் உள்ளன:

  • பாலிமரேஸ் சங்கிலி எதிர்வினை, PCR என்றும் அழைக்கப்படுகிறது
  • அபிட் ஆன்டிஜென் சோதனைகள், RAT என்றும் அழைக்கப்படுகிறது.

உங்களுக்கு PCR சோதனை தேவைப்பட்டால், உங்கள் மருத்துவர் அல்லது சுகாதார வழங்குநர் உங்களுக்காக ஒன்றைக் கோரலாம்.

இணையம் மூலமாகவும், சில பல்பொருள் அங்காடிகள், சில்லரை வியாபாரக் கடைகள், மற்றும் பெட்ரோல் நிலையங்கள் ஆகிய இடங்களிலிருந்தும் நீங்கள் இவற்றை உங்களுடைய தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வாங்கலாம்.

சோதனையை எப்போது மேற்கொள்ள வேண்டும்

நீங்கள் COVID-19 பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்:

  • COVID-19 அறிகுறிகள் இருந்தால் - உங்கள் அறிகுறிகள் லேசானதாக இருந்தாலும் கூட
  • நீங்கள் COVID-19 நோயால் பாதிக்கப்பட்டு 28 நாட்களுக்குப் பிறகு புதிய COVID-19 அறிகுறிகளை உருவாக்கியுள்ளீர்கள்
  • நோயறிவுச் சோதனையை மேற்கொள்ளுமாறு சுகாதாரத் தொழிலர் ஒருவரால் உங்களுக்குச் சொல்லப்பட்டிருந்தால்.

உங்களுடைய நோயறிவுச் சோதனைக்குப் பிறகு

நீங்கள் பரிசோதிக்கப்பட்டவுடன், மற்றவர்களுக்குத் தொற்று ஏற்படும் அபாயத்தைக் குறைக்க, உங்களுக்கு அறிகுறிகள் இருந்தால் நீங்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும்.

COVID-19 நோயறிவுச் சோதனையை மேற்கொள்வதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

உங்களுக்குத் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டால் என்ன செய்ய வேண்டும்

உங்களுக்கு COVID-19 பாதிப்பு இருந்தால், உங்கள் அறிகுறிகள் நிற்கும் வரை வீட்டிலேயே இருக்க வேண்டும்.

உங்களுக்கு உடனடி மருத்துவ உதவி தேவைப்படாவிட்டால், முதியோர் மற்றும் ஊனமுற்றோர் பராமரிப்பு சேவைகள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற அதிக ஆபத்துள்ள அமைப்புகளுக்கு நீங்கள் செல்லக் கூடாது.

உங்களுக்கு COVID-19 பாதிப்பு இருந்தால் என்ன செய்வது என்பது குறித்த கூடுதல் ஆலோசனைகளுக்கு, உங்கள் மாநிலம் அல்லது பிரதேச சுகாதாரத் துறை இணையதளத்தைப் பார்வையிடவும்.

COVID-19 தடுப்பூசியேற்றம்

நீங்கள் COVID-19 நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்து விட்டால், அடுத்த COVID-19 தடுப்பூசியைப் பெற வேண்டும்.

COVID-19 இலிருந்து மீண்டவர்கள், தொற்று உறுதி செய்யப்பட்ட 6 மாதங்களுக்குப் பிறகு அடுத்த தடுப்பூசி அளவைப் பெற பரிந்துரைக்கப்படுகிறது.

COVID-19 இன் பெரும்பாலான நிகழ்வுகளை வீட்டிலேயே நிர்வகிக்கலாம் - குறிப்பாகத் தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு. எதிர்பார்ப்பது என்ன என்பதைப் பற்றி மேலும் தெரிந்துக் கேள்ளுங்கள்:

உங்களுக்கு COVID-19 இருந்தால் தாய்ப்பால் கொடுப்பது

போதுமான அளவிற்கு நீங்கள் சுகமாக இருக்கிறீர்கள் என்ற உணர்வு உங்களுக்கிருந்தால், தாய்ப்பாலூட்டுவதை நீங்கள் தொடரலாம். பிறபொருளெதிரிகள் உங்களிடமிருந்து உங்கள் குழந்தைக்குச் செல்லும்.

நீங்கள் கவலைப்பட்டுக்கொண்டிருந்தால், அல்லது உங்களுக்குக் கேள்விகள் இருந்தால், ‘தாய்ப்பாலூட்டல் உதவி-இணைப்’(Breastfeeding Helpline) பினை நீங்கள் அழைக்கலாம். இந்த உதவி இணைப்பானது நாளுக்கு 24 மணி நேரமும், வாரம் 7 நாட்களும் கிடைக்கும்.

1800 686 268

மொழிபெயர்த்துரைப்பாளர் ஒருவர் உங்களுக்குத் தேவைப்பட்டால், ‘மொழிபெயர்ப்பு மற்றும் உரைபெயர்ப்பு சேவை’(Translating and Interpreting Service)யினை 131 450-இல் அழைத்து, Breastfeeding Helpline-ஐத் தொலைபேசிமூலம் அழைக்குமாறு அவர்களைக் கேளுங்கள்.

உங்கள் குழந்தைகளுக்கு COVID-19 நோயறிகுறிகள் இருந்தால்

உங்கள் குழந்தைகளுக்கு COVID-19 இருப்பது கண்டறியப்பட்டால் அது மன அழுத்தத்தை ஏற்படுத்தும். COVID-19 உடன் குழந்தைகள் கடுமையாக நோய்வாய்ப்படுவது அரிது. பெரும்பாலான குழந்தைகளுக்கு நோயறிகுறிகள் எதுவும் இருக்காது, அல்லது மிதமான அறிகுறிகளே இருக்கும்.

உங்களுடய குழந்தைக்கு இருக்கும் நோயறிகுறிகளைப் பற்றி நீங்கள்: கவலைப்பட்டுக்கொண்டிருப்பீர்களேயானால், உங்களுடைய GP -யுடன் கூடிய விரைவில் தொடர்புகொள்ளுங்கள்.

உங்களுடைய குழந்தைக்குத் தீவிரமான நோயறிகுறிகள் இருந்துகொண்டிருந்தால், உடனடியாக 000 (மூன்று பூஜயம்)-ஐ அழையுங்கள். நீங்கள் ஆங்கிலம் பேசாதவர் என்றால், 'ambulance' வேண்டுமெனக் கேளுங்கள், மற்றும் மொழிபெயர்த்துரைப்பாளர் ஒருவர் வேண்டுமெனக் கேட்பதற்காக இணைப்பில் காத்திருங்கள்.

COVID-19-இற்கான வாய்-வழி சிகிச்சைகள்

COVID-19 வாய்வழி சிகிச்சைகள், பெரியவர்களுக்கு லேசானது முதல் மிதமான COVID-19 க்கு சிகிச்சையளிப்பதற்கான ஒரு விருப்பமாகும். மாத்திரைகள் அல்லது ‘கேப்சூல்’கள் வடிவில் உட்கொள்ளப்படும் மருந்துகளாகும் இவை.

COVID-19 வாய்வழி சிகிச்சைகள் அனைவருக்கும் ஏற்றது அல்ல. மருத்துவர் ஒருவருடைய பரிந்துரைச்-சீட்டு இருந்தால் மட்டுமே உங்களால் அவற்றை வாங்க இயலும்.

COVID-19 -இற்கான சிகிச்சைகளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளுங்கள். 

எங்கிருந்து உதவி பெறுவது

The National Coronavirus Helpline -ஐ, நீங்கள் COVID-19க்கு நேர்மறை சோதனை செய்திருந்தால் என்ன செய்வது என்பது பற்றிய தகவல்களையும் ஆலோசனைகளையும் வழங்குகிறது. இந்தத் தொலைபேசி இணைப்பு நாளுக்கு 24 மணி நேரமும், வாரம் 7 நாட்களும் இயக்கத்தில் இருக்கும்.

1800 020 080

மொழிபெயர்த்துரைப்பாளர் ஒருவர் உங்களுக்குத் தேவைப்பட்டால், National Coronavirus Helpline -ஐ அழைத்து ‘தெரிவு8’-ஐ மேற்கொள்ளுங்கள்.

நிதி-நிலை ஆதரவுதவி

நிதி-நிலை உதவி கிடைக்கலாம். Services Australia வலைத்தலத்திற்குச் சென்று, உங்கள் மொழியில் உள்ள தகவல்களைக் காண ‘Translate’ என்பதன் மீது சொடுக்குங்கள்.

உடல்-நல மற்றும் மன-நல ஆதரவுதவி

உங்களிடம் Medicare கார்டு இருந்தால், தொலைபேசி அல்லது வீடியோமூலம் டெலிஹெல்த் சேவைகளை அணுகலாம்.

நீங்கள் COVID-19 இலிருந்து கடுமையான மனநலப் பிரச்சினைகளை எதிர்கொண்டால், கூடுதல் மனநல அமர்வுகளை அணுகலாம்.

தொலை-வழி சந்திப்புவேளை ஒன்றை ஏற்படுத்திக்கொள்ள, அல்லது மன-நல ஆலோசனை அமர்வுகளைப் பெற உங்களுடைய சுகாதார பராமரிப்பு சேவை வழங்குநரை அழையுங்கள்.

உங்களுக்கு இப்போது உதவி தேவைப்பட்டால்

உங்களுக்கு இப்போது உதவி தேவைப்பட்டால், நீங்கள் அழைக்க இயலுமான பல வித மன-நல சேவைகள் உள்ளன:

குடும்ப வன்முறையின் காரணமாக வீட்டில் இருப்பது உங்களுக்குப் பாதுகாப்பாக இல்லை என்றால், உங்களுடைய மாநில அல்லது எல்லைப்-பிரதேச காவல்துறையினரை, அல்லது 1800 RESPECT (1800 737 732)-ஐ அழையுங்கள்.

மொழிபெயர்ப்பாளர் ஒருவர் உங்களுக்குத் தேவைப்பட்டால், TIS National -இனால் இந்த சேவைகளுடன் உங்களுக்குத் தொடர்பு ஏற்படுத்தித் தர இயலும்.

131 450

மூலவளங்கள்

Date last updated:

Help us improve health.gov.au

If you would like a response please use the enquiries form instead.