முகக்கவசங்கள் COVID-19 போன்ற வைரசுகள் பரவுவதைத் தடுக்க உதவுவதோடு, நாம் நோய்வாய்ப்படும் அபாயத்தையும் குறைக்கிறது.
அவற்றை அணிவதற்கு பல நல்ல காரணங்கள் உள்ளன.
என் கருவில் இருக்கும் குழந்தைக்காக நான் முகக்கவசம் அணிகிறேன்.
என்னைப் பாதுகாத்துக் கொள்ள நான் முகக்கவசம் அணிகிறேன்.
நோய்வாய்பட்டுள்ள என் பாட்டியைப் பாதுகாப்பதற்காக நான் முகக்கவசம் அணிகிறேன்.
தேவைப்படும்போது பயன்படுத்துவதற்காக உங்களுடன் ஒரு முகக்கவசத்தை வைத்திருங்கள். முகக்கவசம் அணிந்திருக்கும் ஒருவரை நீங்கள் கண்டால், முகக்கவசம் அணிவதற்கான அவர்களின் விருப்பத்தினை மதிக்கவும்.
COVID-19 இலிருந்து உங்களையும் உங்கள் சமூகத்தையும் எவ்வாறு பாதுகாப்பது என்பது பற்றிய கூடுதல் தகவலுக்கு, ‘தேசிய கொரோனா வைரஸ் ஹெல்ப்லைன்'-ஐ 1800 020 080 என்ற இலக்கத்தில் அழைக்கவும். இலவச உரைபெயர்ப்புச் சேவைகளைப் பெற ‘தெரிவு 8’-ஐ மேற்கொள்ளவும்.